மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து எச்.ராஜா வீடு திரும்பியுள்ளார்.
இந்த தகவலை அவரது குடும்பத்தினர் சனிக்கிழமை தெரிவித்தனர். இதுகுறித்து எச்.ராஜாவின் எக்ஸ் தளத்தில், அனைவரின் பிரார்த்தனையும், மருத்துவர்களின் சிகிச்சையும் இறைவனின் அனுக்ரஹத்தால் பலனளித்து எச்.ராஜா பூரண குணமடைந்து உடல்நலம் தேறி அப்போலோ மருத்துவமனையில் இருந்து நலமோடு வீடு திரும்பினார்.
நான்கு வாரங்கள் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். இவ்வாறு அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பாஜக மூத்த தலைவரும் தேசிய குழு உறுப்பினருமான எச்.ராஜா (68), கடந்த ஜன.30ஆம் தேதி சென்னை கிண்டியில் நடைபெற்ற தனியாா் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது திடீரென்று மயங்கி விழுந்தாா்.
உடனடியாக அவா் அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்கு முதல்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. பின்னா், அவா் மேல் சிகிச்சைக்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மூளை ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருந்ததால், அவருக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்தனா்.
மருத்துவமனையில் இருந்தபோது எச்.ராஜாவை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
Summary
Senior BJP leader H Raja, who was undergoing treatment at a city hospital for nearly three weeks, was discharged, his family said on Saturday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கடுமையான அரிப்பைக் குணப்படுத்த...

ஜனநாயகன் வெளியான பிறகு ஒரு ரசிகனாக திரையரங்கில் பார்ப்பேன்! - அண்ணாமலை பேச்சு!

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



