பாகுபலி படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான் 'கல்கி 2898ஏடி'.
பிரபாஸுடன் கமல்ஹாசனும், அமிதாப் பச்சனும் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நாக் அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஜூன் 27-ஆம் தேதி 'கல்கி 2898 ஏடி' திரைக்கு வரவிருக்கிறது.
இந்தப் படத்தில் கமல் நடிக்க ஒப்புகொண்டது குறித்து பலருக்கும் ஆச்சரியம் இருந்தது. இது குறித்து நேற்று (ஜூன் 19) நடந்த முன் வெளியீட்டு விழாவில் கமல் ஹாசன் பேசியதாவது:
நான் எப்போதும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதில் ஆர்வம் உள்ளவன். நாயகன் காதல் பாடல் பாடிக்கொண்டு நாயகிக்காக காத்திருக்கும்போது வில்லன்தான் படத்துக்கு நன்மை செய்வான். வில்லன் தனக்கு பிடித்ததை எல்லாம் செய்வான். கல்கியில் நான் அதைதான் செய்திருக்கிறேன். மகிழ்ச்சியாக இருந்தது.
இயக்குநர் நாக் அஸ்வினை பாராட்ட வேண்டும். சாதாரண மனிதர்கள்தான் அசாதரணமான செயல்களை செய்வார்கள். இயக்குநர் கே.பாலசந்தரை எடுத்துக்கொள்ளுங்கள் அவர் பார்க்க அரசு அதிகாரி மாதிரி இருப்பார். ஆனால் அவர் அற்புதமான படங்களை இயக்கியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சாதனை அல்ல... சரித்திரம்!

கேவிஎன் நிறுவனத்திற்காக மீண்டும் நடிக்கும் விஜய்?

எதிர்நீச்சல் - 2 தொடரில் மாற்றம்! அறிமுகமாகும் புதிய வில்லன்!
கல்கி - 2 படப்பிடிப்பில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு



