நடிகை வேதிகா தனது புதிய இணையத் தொடரின் கதாபாத்திரத்துக்காக 3 மணி நேரம் ஒப்பனை செய்யவேண்டியிருந்ததென விடியோ வெளியிட்டுள்ளார்.
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர் நடிகை வேதிகா. தமிழில் 2006இல் மதராஸி எனும் படத்தின் மூலம் அறிமுகமானார். முனி, சக்கரகட்டி, மலை மலை, பரதேசி படங்களில் நடித்து கவனம் பெற்றுள்ளார்.
கடைசியாக தமிழில் காஞ்சனா 3 படத்தில் நடித்திருந்தார். கன்னடம், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தற்போது 4 படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன. தமிழில் விநோதன், பேட்ட ராப், ஜங்கிள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் முதல்முறையாக இணையத் தொடர் ஒன்றிலும் நடித்துள்ளார். யக்ஷினி என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தத் தொடரினை தேஜா மர்னி இயக்கியுள்ளார். ராம் வம்சி கிருஷ்ணா எழுதியுள்ள இந்தத் தொடரில் வேதிகா முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 6 எபிசோடுகள் உள்ள இந்தத் தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
இந்த யக்ஷினி கதாபாத்திரத்துக்காக நடிகை வேதிகா 3 மணி நேரம் மேக்கப் போடுவதாகவும் அதனை நீக்க 2 மணி நேரமும் ஆகின்றதெனக் கூறியுள்ளார். மேலும் தனது எக்ஸ் பக்கத்தில் விடியோ வெளியிட்டு, “பாதுகாப்பான கதாபாத்திரத்தில் நடிப்பதில்லை, ஒரே மாதிரியான படங்களில் நடிப்பதில்லை, அழகான கதாபாத்திரங்களிலும் நடிப்பதில்லை. யக்ஷினியில் மாயா கதாபாத்திரத்துகாக 3 மணி நேரம் மேக்கப் போடுவேன், அதைக் கலைப்பதற்கு 2 மணி நேரமாகும். சிகையலங்காரம், ஒப்பனை கலைஞர்களுக்கு பாராட்டுகள்” எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒரு மணிநேரம் போதும்! சட்டத்திருத்தம் குறித்து அமித் ஷா

ஏழுமலையான் தரிசனம்: 15 மணிநேரம் காத்திருப்பு

தில்லி அடல் உணவக நேரம் மாற்றம்: முதல்வா் ரேகா குப்தா நடவடிக்கை

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு



