தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

கவனம் ஈர்க்கும் யோகி பாபுவின் சட்னி - சாம்பார் வெப் தொடர்!

நடிகர் யோகி பாபு மற்றும் வானி போஜன் நடிக்கும் புதிய வெப் தொடர் 'சட்னி - சாம்பார்'.

News image
சட்னி சாம்பார் வெப் தொடர்.
Updated On :26 ஜூலை 2024, 12:00 pm

DIN

நடிகர் யோகி பாபு மற்றும் வானி போஜன் நடிக்கும் புதிய வெப் தொடரான 'சட்னி - சாம்பார்' டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

பல திரைப்படங்களில் பிரதான பாத்திரங்களில் நடித்துவரும் நடிகர் யோகி பாபு, இயக்குநர் ராதா மோகன் இயக்கும் புதிய வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த வெப் தொடருக்கு 'சட்னி சாம்பார்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதில் வாணி போஜன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், இத்தொடரில் தீபா சங்கர், காயத்ரி ஷான், நிழல்கள் ரவி, ஆர். சுந்தர்ராஜன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இந்த வெப் தொடரை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. இரும்புத்திரை, சர்தார், கைதி மற்றும் மாஸ்டர் போன்ற படைப்புகள் மூலம் புகழ் பெற்ற எழுத்தாளர் பொன் பார்த்திபன் இந்த தொடருக்கு வசனங்களை எழுதியுள்ளார்.

இந்த தொடர் குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நகைச்சுவைத் தொடராக எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு உணவகங்களுக்கு இடையே நடக்கும் போட்டியே இந்த தொடரின் மையக்கரு.

இந்நிலையில், சட்னி சாம்பார் வெப் தொடர் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.