டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தள்ளிப்போகும் நானியின் தி பாரடைஸ் பட வெளியீடு!

நடிகர் நானியின் ‘தி பாரடைஸ்’ படத்தின் வெளியீடு தள்ளிப்போவது குறித்து...

News image
தி பாரடைஸ் போஸ்டர். - படம்: எக்ஸ் / நானி
Updated On :12 பிப்ரவரி 2026, 1:17 pm

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் நானியின் “தி பாரடைஸ்” திரைப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நானி நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் “தி பாரடைஸ்”. இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கும் இப்படம் மிகப் பெரியளவில் பிரம்மாண்டமாக உருவாகின்றது.

இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகும் இப்படத்தில் நடிகர்கள் மோகன் பாபு, சோனாலி குல்கர்னி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் வரும் மார்ச் 26 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தி பாரடைஸ் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு வரும் ஆகஸ்ட் 21 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு வியாழக்கிழமை (பிப். 12) அறிவித்துள்ளது.

ஏற்கெனவே, கடந்த 2025 ஆம் ஆண்டு வெளியான தி பாரடைஸ் படத்தின் கிளிம்ஸ் விடியோ இந்திய அளவில் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.