நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

கோட் - அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!

விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:19 pm

DIN

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தென்னாப்பிரிக்கா உள்பட பல இடங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு, கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (G.O.A.T. - Greatest Of All Times) எனப் பெயரிட்ட அறிவிப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Story image

இதையும் படிக்க: வேட்டையன் அப்டேட்!

இப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவும் நடிகர் விஜய்யும் இணைந்து ஒரு பாடலைப் பாட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பொங்கலை முன்னிட்டு இப்படத்தின அப்டேட் ஒன்றை வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் கொடுத்துள்ளார். தன் பதிவில், “இந்தப் பொங்கல் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸாக இருக்கும்” எனப் பதிவிட்டுள்ளார். இதனால், படத்தின் விடியோ அல்லது போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.