தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

2 காசோலைகளை தனுஷுக்கு பரிசளித்த கலாநிதி மாறன்!

ராயன் பட வெற்றிக்காக தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தனுஷுக்கு 2 காசோலைகளை வழங்கியுள்ளார்.

News image

2 காசோலைகளை தனுஷுக்கு பரிசளித்த கலாநிதி மாறன் - படம்: எக்ஸ் / சன்பிக்சர்ஸ்

Updated On :23 ஆகஸ்ட் 2024, 7:53 am

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த ராயன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் வசூல் ரீதியாக உலகளவில் ரூ.150 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேநேரம், சில சண்டைக்காட்சிகள் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதால், படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்தது. தனுஷ் நடித்த படங்களிலேயே இதுவே பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாக மாறியுள்ளது.

படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தனுஷ் பத்திரிகையாளர்களுக்கு விருந்தளித்து தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் அமேசான் பிரைம் ஓடிடியில் இன்று (ஆக.23) வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, பிரகாஷ் ராஜ் சிறப்பாக நடித்திருப்பதாக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நடிகரும் இயக்குநருமான தனுஷுக்கு ராயன் படத்தின் வெற்றிக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இரண்டு காசோலைகளை வழங்கியுள்ளார்.

இதற்கு முன்பும் ஜெய்லர் படத்தின் வெற்றிக்கு காசோலை கார் என நடிகர் இயக்குநர்களுக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.