நடிகர் விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் ஓடிடி வெளியீட்டில் சாதனை படைத்துள்ளது.
இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
திரையரங்க வெளியீட்டிலேயே இப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் வெற்றிப்படமானது.
தொடர்ந்து, மகாராஜா திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ஜூலை 12 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியானது.
ஓடிடி வெளியீட்டிலும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, கிளைமேக்ஸ் காட்சிகள் பலரையும் பாதித்தது சமூக வலைதள விமர்சங்களில் காண முடிந்தது.
இந்த நிலையில், நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்தாண்டு வெளியான இந்தியப் படங்களிலேயே அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் மகாராஜா 1.86 கோடி பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
க்ரூ (crew - 1.78 கோடி), லாப்தா லேடீஸ் (1.71 கோடி), சைத்தான் (1.48 கோடி), ஃபைட்டர் (1.4 கோடி), அனிமல் (1.36 கோடி), மஹாராஜ் (1.16 கோடி), டங்கி (1.08 கோடி), பக்ஷக் (1.04 கோடி), பாடே மியான் சோட்டே மியான் (96 லட்சம்) ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.
நெட்பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட முதல் தமிழ்ப் படம் என்கிற சாதனையை மகாராஜா படைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஓடிடியில் யூத் எப்போது?

ரூ.25,000 கோடி சொத்து மதிப்பை நிா்வகிக்கும் ‘ஃபண்ட்ஸ் இந்தியா’

100 கோடி டன் நிலக்கரி உற்பத்தி: இரண்டாம் ஆண்டாக இந்தியா சாதனை

காந்தி டாக்ஸ் ஓடிடி தேதி!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை



