2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

நிஜத்திலும் தம்பதிகளாக மாறிய சின்னத்திரை நடிகர்கள்!

சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த பிரிட்டோ மனோ, ராஜா ராணி -2 தொடரில் நடித்த சந்தியாவை திருமணம் செய்துகொண்டார். 

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:02 pm

DIN


சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த பிரிட்டோ மனோ, ராஜா ராணி -2 தொடரில் நடித்த சந்தியாவை திருமணம் செய்துகொண்டார். 

இவர்கள் இருவரும் தற்போது, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தவமாய் தவமிருந்து தொடரில் தம்பதிகளாக நடித்து வருகின்றனர்.  

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தவமாய் தவமிருந்து தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தத் தொடரில் பிரிட்டோ மனோ, சந்தியா ராமச்சந்திரன் தம்பதிகளாக நடித்து வருகின்றனர். 

Story image

இவர்கள் இருவரும் காதலித்துவந்த நிலையில், தற்போது திருமணம் செய்துகொண்டனர். சென்னையில் நடைபெற்ற இவர்கள் திருமணத்துக்கு பல்வேறு திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர். 

பிரிட்டோவின் நண்பரும் சின்னத்துரை நடிகருமான சித்து, இது குறித்து சமூக வலைதளத்தில் விடியோ பதிவிட்டு தமதிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பிரிட்டோ மனோ, சந்தியா ராமச்சந்திரன் சேர்ந்து நடிக்கும் தொடரும், அதில் அவர்கள் இருவரின் காட்சிகளும் பல்வேறு ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

Story image

அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் பிரிட்டோ மனோ. அதனைத்தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி, சின்னத்தம்பி ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். 

மாடலிங் துறையில் பணியாற்றிவந்த சந்தியா ராமச்சந்திரன், கோகுலத்தில் சீதை தொடர் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தெய்வம் தந்த பூவே தொடரில் நடித்துள்ளார். சனூன், பேய காணோம் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

தற்போது இவர்கள் இருவரும் தவமாய் தவமிருந்து தொடரில் கணவன் - மனைவியாக நடித்து வருகின்றனர். தற்போது நிஜ வாழ்விலும் இருவரும் கணவன் - மனைவியாகியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.