காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

முழு நேர சீரியலுக்கு வந்த விஜய்யின் ரீல் அம்மா!

’குக் வித் கோமாளி சீசன் 4’ விரைவில் தொடங்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து புதிய தொடரும் ஒளிபரப்பாகவுள்ளது. 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 11:47 am

DIN


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குடும்பத் தலைவிகள் முதல் இளம் தலைமுறையினர் வரை பலதரப்பு மக்களையும் கவரும் வகையில் தொடர்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 6 நிகழ்ச்சியும் ஓரிரு வாரங்களில் இறுதிக்கட்டத்தை எட்டவுள்ளது. அந்த நிகழ்ச்சியில் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டதும், பிக்பாஸ் ஒளிபரப்பான நேரத்திற்கு மாற்றாக புதிய நிகழ்ச்சிகளை தயாரிக்கும் பணியில் விஜய் தொலைக்காட்சி ஈடுபட்டுள்ளது. 

அந்தவகையில் குக் வித் கோமாளி சீசன் 4 விரைவில் தொடங்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து புதிய தொடரும் ஒளிபரப்பாகவுள்ளது. 
அந்தவகையில் மகாநதி என்ற தொடரின் முன்னோட்டக் காட்சி (புரோமோ) வெளியாகியுள்ளது. 

Story image

இதில் சுஜாதா சிவகுமார், சரவணன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். சுறா படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்தவர் இவர். 36 வயதினிலே, புலிக்குத்தி பாண்டி, மெளனகுரு உள்ளிட்ட படங்களில் நடித்தவர். 

திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும், பருத்தி வீரன் மூலம் பலராலும் பாராட்டப்பட்டவர் நடிகர் சரவணன். அரண்மனை, அலெக்ஸ் பாண்டியன், வீரமும் ஈரமும், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். 

மகாநதி என்ற டைட்டிலுக்கு கீழே சகோதரிகளின் கதை என்ற துணைத் தலைப்பு இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் நடுத்தரக் குடும்பத்து இளம் பெண்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த தொடர் நகரலாம். விஜய் தொலைக்காட்சியில் பல வெற்றி தொடர்களிக் கொடுத்துக்கொண்டிருக்கும் பிரவீன் பென்னட் இந்த தொடரை இயக்குகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.