பிக் பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக வந்த சுரேஷ் சக்ரவர்த்தி வழக்கம் போல் கொளுத்திப் போட்டு போட்டியாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 13 நாள்களே உள்ள நிலையில், 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
இந்த வாரத்தில் பணப்பெட்டி அறிமுகப்படுத்தப்படும். இறுதி வாரம் வரை சென்று வெற்றி பெற முடியாது என நினைக்கும் போட்டியாளர் சம்பள பணத்துடன் பணப்பெட்டியையும் எடுத்துச் செல்லலாம்.
அதற்கு முன்னதாக பிக் பாஸ் வீட்டிற்குள் முன்னாள் போட்டியாளர்கள் வருகை தந்து போட்டியாளர்களின் குறைகளை எடுத்துரைப்பார்கள். இதன்மூலம் போட்டியாளர்களின் தன்நம்பிக்கை குறைய பெரிதும் வாய்ப்புள்ளது.
இந்நிலையில், இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் முதல் ஆளாக வருகிறார் சுரேஷ் சக்ரவர்த்தி என்கிற சுரேஷ் தாத்தா. இவர் போட்டியாளராக இருந்த சீசனில் எல்லை மீறிய கருத்துகளை தெரிவித்தும், போட்டியாளர்களுக்கு இடையே கொளுத்திப் போட்டும் பிரபலமானவர்.
இதையும் படிக்க | பணப்பெட்டியுடன் கிளம்பப்போவது யார்? பரபரப்பில் பிக் பாஸ் வீடு
இவர் ஏடிகேவை ஊர் கிழவி என்றும், அமுதவாணனை ஊறுகாய் கிழவி என்றும் விமர்சிப்பது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் அஷீமின் முகம் சிரிப்பில்லாமல் காணப்படுவதால், முன்னதாக அஷீமையும் விமர்சித்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
மேலும், விக்ரமனிடம் பேசும்போதும் தேவையில்லாத கருத்துகளை சுரேஷ் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஆலந்தூர் முதல்வர் திருமண மாளிகையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

கிலோவுக்கு ரூ. 5,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை உயர்வு!

தமிழ்நாட்டை வீழ்த்த நினைக்கும் பாஜக: முதல்வர் ஸ்டாலின்

அமெரிக்காவின் 126% வரி எதிரொலி! சூரிய சக்தி பங்குகள் 14% சரிவு!
வீடியோக்கள்

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...
#T20WC | வான்கடேவில் அதகளப்படுத்திய விண்டேஜ் வெஸ்ட் இண்டீஸ்: இந்தியாவுக்குச் சிக்கல்! |
தினமணி வீடியோ செய்தி...

ADMK Kalyana Sundaram Interview | எடப்பாடி ஏன் பணம் கொடுக்கிறார் ? | DMK | MK Stalin | EPS | ADMK
தினமணி வீடியோ செய்தி...

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!
தினமணி வீடியோ செய்தி...

