இந்தியாவில் முதலிடம்: முதல்நாளில் வசூல் சாதனை புரிந்த சலார்!
பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள சலார் படத்தின் முதல்நாள் வசூல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.


கேஜிஎஃப் - 2 திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்துள்ளார். பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சலார் திரைப்படம் நேற்று (டிச.22) உலகம் முழுவதும் வெளியானது. சமீபத்தில், சலார் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
குறிப்பாக, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் 150 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
படம் ரசிகர்களிடையே சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறது. காந்தாரா நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி, சிரஞ்சீவி உள்ளிட்டோர் சலார் குறித்து புகழ்ந்து பதிவிட்டுள்ளார்கள்.
இந்நிலையில் முதல்நாளில் சலார் ரூ.178.7 கோடி வசூலித்து அசத்தியுள்ளது. 2023ஆம் ஆண்டில் வெளியான படங்களிலேயே இதுதான் முதலிடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தாண்டில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் முதல்நாளில் ரூ. 148.5 கோடி வசூலித்திருந்தது. சலார் இதனை முந்தி முதலிடம் பிடித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...