ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா: தனுஷ்

நடிகர் ரஜினிகாந்துக்கு நடிகர் தனுஷ் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:25 pm

DIN

ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இசை - அனிருத்.

இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாஸில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இன்று ரஜினியின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் பெயரை அறிவிக்க உள்ளனர். இதற்கிடையே, நடிகர் ரஜினிக்கு பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

தற்போது, நடிகரும் ரஜினியின் மருமகனுமான தனுஷ், “பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா” என அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.