கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

விஜய் - 68.. வாழ்த்துத் தெரிவித்த அஜித்!

வெங்கட் பிரபு இயக்கும் விஜய்  - 68 படத்திற்கு நடிகர் அஜித் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:07 pm

DIN

நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்திற்குப் பின்,  விஜய்யின் 68ஆவது படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குவார் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். 

இப்படத்திற்கு ‘சிஎஸ்கே’ என தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. மேலும்,  இப்படப்பிடிப்பிற்கு முன் ஓய்வு எடுப்பதற்காக  விஜய் லண்டன் சென்றுள்ளார்.

இதையும் படிக்க: ஐமேக்ஸ் தரத்தில் லியோ!

இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் விஜய் - 68 க்கு  நடிகர் அஜித் குமார் வாழ்த்துத் தெரிவித்தாரா? எனப் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்கு வெங்கட் பிரபு, ‘முதல் வாழ்த்தே அஜித் சாரிடமிருந்துதான் வந்தது’ எனப் பதிலளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.