நல்லகண்ணு உடல்நிலை! விஜய் விசாரிப்பு!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

விக்ரம், விஜய் சேதுபதியுடன் நடிக்கும் ராஷ்மிகா! இயக்குநர்?

நடிகர் விஜய் சேதுபதியை வைத்து திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற விருப்பத்தை சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் ஜூட் அந்தோணி ஜோசப் குறிப்பிட்டிருந்தார்.

News image
விக்ரம் / ராஷ்மிகா மந்தனா / விஜய் சேதுபதி
Updated On :6 பிப்ரவரி 2024, 1:05 pm

DIN

நடிகர் விக்ரம், விஜய் சேதுபதி மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் பிரபல மலையாள இயக்குநர்.

சமீபத்தில் வெளியான 2018 திரைப்படம் மலையாள திரையுலகில் 100 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இந்தத் திரைப்படத்தை இயக்கிய ஜுட் அந்தோணி ஜோசப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். 

இவர் தற்போது பல நட்சத்திரங்களை வைத்து திரைப்படம் இயக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக நடிகர் விக்ரம், விஜய் சேதுபதி மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரிடம் பேச்சில் ஈடுபட்டுள்ளார்.   

திரைப்படத்தில் நடிப்பது தொடர்பாக ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையே நடபெற்று இருப்பதாகவும், நடிகர்கள் உறுதியானதும் விரைவில் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் இயக்குநர் ஜோசப் குறிப்பிட்டுள்ளார். 

நடிகர் விஜய் சேதுபதியை வைத்து திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற விருப்பத்தை சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் ஜூட் அந்தோணி ஜோசப் குறிப்பிட்டிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.