பாலுமகேந்திராவின் மூத்த பிள்ளை நான். கடைசிப்பிள்ளை சீனு ராமசாமி இங்கு வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. பாலுமகேந்திரா ஒரு மகா கலைஞர் அவருக்கு சினிமாவில் எல்லாமே தெரியும். அவரது முதல் படமான கோகிலாவில் அண்ணன் கமலுடன் இணைந்து நடிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. கமல் சார், ஷோபா மேடம், ரோஜா ரமணி மோகன் ஃபேவரைட் படத்துல கண்டிப்பா கோகிலா இருக்கும். பாலுமகேந்திரா ஸ்கூல்ல இருந்து சீனு வந்தது மகிழ்ச்சி. ஹராவில் என்னை மிக வித்தியாசமாக மாற்றி படமெடுத்திருக்கிறார் விஜய் ஶ்ரீ. இவருடன் இணைந்தது மகிழ்ச்சி. அப்பா, மகளுக்குள் உள்ள உறவை சொல்லும் கதை இது. குஷ்பு உடன் டூயட் இருக்கு உங்கள் அனைவருக்கும் இந்தப்படம் கண்டிப்பா பிடிக்கும். நான் படத்தில நடிச்சாலும் நடிக்காட்டியும் என்னுடன் உடன் இருப்பவர்கள் என் ரசிகர்கள் தான். அவர்களுக்கு என் பெரிய நன்றி. 45 வருட விழா வேண்டாம் என்றேன் ஆனால் என் ரசிகர்கள் வற்புறுத்தியதால் ஒப்புக்கொண்டேன். உங்கள் அனைவருக்கும் பிடித்த படமாக ஹரா இருக்கும் நன்றி.