மீண்டும் தெலுங்கு இயக்குநருடன் இணையும் நடிகர் தனுஷின் அடுத்த படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது.
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து, அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர், தெலுங்கு இயக்குநர் வெங்கி அத்லூரியின் வாத்தி ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.
இந்நிலையில், லவ் ஸ்டோரி, ஃபிடா உள்ளிட்ட தெலுங்கு படங்களை இயக்கிய சேகர் கம்முலா படத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் வெளியாகவுள்ள இந்த படத்தின் பூஜை ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது.
இதையும் படிக்க | யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்? 50-வது நாளில் பிக் பாஸ்!
மேலும், படத்தில் நடிக்கவிருக்கும் பிற நடிகர்களின் தகவல்கள் விரைவில் வெளியாகும் எனவும், படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே தனுஷின் அடுத்த தமிழ் - தெலுங்கு படமான வாத்தி அடுத்தாண்டு பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

