ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’ படத்தின் பூஜை! (படங்கள்)
லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக உள்ள ‘லால் சலாம்’ படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.


லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக உள்ள ‘லால் சலாம்’ படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க தனது 171வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் இயக்குநர் சிபி சக்கரவர்த்தியுடன் கைகோர்க்கிறார் என்ற தகவல் வெளியான நிலையில் தற்போது அவரது அடுத்த படத்தினை மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. ரஜினிகாந்த் நடிக்கும் இந்த இரு படங்களையும் லைகா நிறுவனம் தயாரிக்கிறது என சமீபத்தில் செய்தி வெளியானது.

இந்நிலையில் சென்னையில் படத்தின் பூஜை நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ஆகியோருடன் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் கலந்துக் கொண்டனர்.

விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் ‘லால் சலாம்’ படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. இசை- ஏ.ஆர்.ரஹ்மான். போஸ்டரில் ஹெல்மட், கிரிக்கெட் பேட் இருப்பதால் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படமாக உருவாகியுள்ளதாக தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...