மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

இளையராஜா - யுவன் இசையில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாமனிதன்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் பட வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:45 am

DIN

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாமனிதன்' படம் வருகிற மே 6 ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை யுவன் ஷங்கர் ராஜா தனது ஒய்எஸ்ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக தயாரித்துள்ளார். 

தர்மதுரை படத்துக்கு பிறகு இயக்குநர் சீனு ராமசாமி, விஜய் சேதுபதி, யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி இணைந்துள்ளதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்துக்கு இளையாராஜாவுடன் இணைந்து யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

Story image

இந்தப் படத்தை ஸ்டுடியோ 9 சார்பாக ஆர்.கே.சுரேஷ் வெளியிடுகிறார். இவர்தான் தர்மதுரை படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்திலிருந்து தட்டிப்புட்டா மற்றும் நினச்சதொன்னு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.