கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

விக்ரமில் பார்வை மாற்றுத்திறனாளியாக நடிக்கும் கமல்? இதுதான் கதையா?

கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:33 am

DIN

நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்து வரும் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் ஃபகத் ஃபாசிலின் காட்சி படமாக்கப்படும் விடியோவைப்  பகிர்ந்து விக்ரம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டுள்ளார். 

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசன் பார்வை மாற்றுத்திறனாளியாக நடிக்கிறாராம்.  அரசியல்வாதிகளான விஜய் சேதுபதி - ஃபகத் ஃபாசிலிடம் சிக்கிக்கொண்ட நரேனை ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி விக்ரம் எப்படி மீட்கிறார் என்பதே படத்தின் கதை என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட இதே பாணியில் 'பிளைண்ட்' என்ற கொரியன் படத்தைத் தழுவி நயன்தாராவின் 'நெற்றிக்கண்' படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.