டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பிக்பாஸில் அமீர், தாமரையிடையே வலுக்கும் சண்டை - ''என்னை கேட்க உனக்கு உரிமையில்லை''

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரமோவில் அமீர் மற்றும் தாமரை இருவரும் சண்டையிட்டுக்கொள்கின்றனர். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:00 am

DIN

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் சஞ்சீவ் வெளியேறினார். டிக்கெட் டு ஃபினாலேயில் வென்றதன் மூலம் அமீர் நேரடியாக இறுதி போட்டிக்கு செல்கிறார். இனி பிக்பாஸ் அளிக்கும் போட்டிகள் கடுமையாக இருக்கும் என்பதால் பிக்பாஸ் வீட்டில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் இன்று (திங்கள்கிழமை) காலை வெளியான ப்ரமோவில் முதல் ஓபன் நாமினேஷன் நடைபெற்றது. போட்டியாளர்கள் தாங்கள் நாமினேட் செய்யும் மற்ற போட்டியாளர்கள் மீது மாலை அணிவிக்க வேண்டும் என்று பிக்பாஸ் தெரிவிக்கிறார். 

அமீர் ராஜுவுக்கு மாலை அணிவிக்கிறார். சிபி நிரூபிற்கு மாலை அணிவித்து, ''நீ நேர்மையாக விளையாடவில்லை'' என்கிறார். தனக்கு மாலை அணிவிக்கும் பாவனியிடம், ''நேற்று ஒரு மாதிரியும், இன்று வேறு மாதிரியும் பேசுவாய்'' என்று ராஜு சொல்கிறார். இதுகுறித்த முழுமையான விவரங்கள் இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும். 

இதன் ஒரு பகுதியாக தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரமோவில் தாமரை மற்றும் அமீர் ஒருவர் மீது ஒருவர் கடுமையாக குற்றம் சுமத்துகின்றனர். அப்போது தாமரை, அமீரிடம், என்னை கேட்க உனக்கு உரிமையில்லை என மிகுந்த கோபத்துடன் தெரிவிக்கிறார். 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.