காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

பிக்பாஸ் நமிதா மாரிமுத்து இப்பொழுது என்ன செய்கிறார் ? : வெளியான விடியோ: ரசிகர்கள் நெகிழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நமிதா ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்கும் விடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:24 am

DIN

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நமிதா ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்கும் விடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வரலாற்றில் முதன்முறையாக தமிழ் பிக்பாஸில் திருநங்கை நமிதா மாரிமுத்து போட்டியாளராக கலந்துகொண்டார். இதனையடுத்து விஜய் தொலைக்காட்சிக்கு பாராட்டுகள் குவிந்தது. 

நிகழ்ச்சியில் பேசிய நமிதா, நாங்கள் மாறிவிட்டோம். ஆனால் எங்கள் மீதான கண்ணோட்டத்தை மாற்றுங்கள் என மிக உருக்கமாக தெரிவித்தார். ரசிகர்கள் அவருக்கு பெரிதும் ஆதரவு அளிக்கத் துவங்கினர். இந்த நிலையில் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் பிக்பாஸ் வீட்டில் இருந்து பாதியில் வெளியேறினார். 

நமிதா மாரிமுத்து சிகிச்சை பெற்ற பிறகு மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு திரும்பி வருவார் என்று கூறப்பட்ட நிலையில் அவர், விடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், சாலையோரம் வசிப்போருக்கும், ஆதரவற்றோருக்கும் உணவு வழங்குகிறார். இதனையடுத்து நமிதாவின் மனித நேயத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.