ரோஜா தொடரில் இருந்து விலகியது ஏன் ? வெங்கட்டின் குற்றச்சாட்டு: என்ன நடந்தது ?
ரோஜா தொடரில் இருந்து நடிகர் வெங்கட் விலகியதற்கான காரணம் குறித்த தவகல் இணையத்தில் வைரலாகி வருகிறது.


ரோஜா தொடரில் இருந்து நடிகர் வெங்கட் விலகியதற்கான காரணம் குறித்த தவகல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா தொடரில் அஸ்வின் என்ற வேடத்தில் நடித்து வந்த வெங்கட் சமீபத்தில் அந்தத் தொடரில் இருந்து விலகினார். ஆனால் விலகியதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் ரோஜா தொடரில் இருந்து அவர் வெளியேறியதற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியில் ஜீவா என்ற வேடத்தில் வெங்கட் நடித்து வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அவருக்கு முக்கியமான கேரக்டர்.

ரோஜா தொடரில் இரண்டாம் கதாநாயகன் என்று கூறி அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். ஆனால் தொடரில் அவருக்கான முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பது வெங்கட்டின் வருத்தம். மேலும், தொடரின் முன்னோட்டத்தில் கூட அவர் இடம் பெறாதது அவரது வருத்தத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | எஸ்பிபி பாடிய 'அண்ணாத்த' பாடல் அக்டோபர் 4இல் வெளியீடு
மேலும், ரோஜா தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் ரசிகர்கள், அவரை பாண்டியன் ஸ்டோர்ஸ் வேடத்தை நினைவுபடுத்தும் விதமாக ஜீவா என்று கூச்சலிட்டுள்ளனர். இதனால் அவர் மீது ரோஜா தொடரின் நிர்வாகத்தினர் அதிருப்தியில் இருந்துள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக கரோனா பாதிப்பில் இருந்து மீண்ட அவருக்கு உடல் நிலை ஒத்துழைக்காததால், ஒரே நேரத்தில் இரண்டு தொடர்களிலும் நடிக்க முடியவில்லை. இதன் காரணமாகவே வெங்கட் ரோஜா தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்தத் தொடர் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...