2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விவாகரத்து, முடக்குவாதம்... எனினும் மகிழ்ச்சியாக உள்ளேன்: டிடியின் வித்தியாசமான மகளிர் தின வாழ்த்து!

36 + விவகாரத்தானவர், 36 + (இன்னும்) குழந்தையில்லை, 36 + முடக்குவாதம்... 

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:41 pm

DIN

தன்னுடைய சொந்த வாழ்க்கையின் கஷ்டங்களை வெளிப்படுத்தி வித்தியாசமான மகளிர் தின வாழ்த்துகளைக் கூறியுள்ளார் பிரபல தொகுப்பாளர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளரும் நடிகையுமான டிடி, சமூகவலைத்தளங்களில் மகளிர் தின வாழ்த்து தொடர்பாக காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். மாஸ்டர் குட்டி ஸ்டோரி பாடலின் பின்னணியில் தன்னுடைய சொந்த வாழ்க்கையின் நிலைகளை வெளிப்படுத்தும் வெவ்வேறு அட்டைகளைக் காண்பித்தபடி காணொளியில் அவர் இடம்பெற்றிருந்தார். அந்த அட்டைகளில் கூறப்பட்டிருந்ததாவது:

36 + சிங்கிள்

36 + விவகாரத்தானவர்

36 + (இன்னும்) குழந்தையில்லை

36 + முடக்குவாதம் 

ஆனால்

36 + மகிழ்ச்சியாக உள்ளேன்

ஏனெனில் ஒவ்வொருவருடைய நேரக்கோடும் (வாழ்க்கை) வித்தியாசம்.

எனவே உங்களுடைய நேரக்கோட்டை அனுபவியுங்கள்.

மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுங்கள்

மகளிர் தின வாழ்த்துகள் என்றார்.

சொந்த வாழ்க்கையின் கஷ்டங்களை வெளிப்படையாகக் கூறி அதன்மூலமாக மற்றவர்களை ஊக்கப்படுத்தும் டிடியின் இந்த வித்தியாசமான வாழ்த்துக்கு ஏராளமான பாராட்டுகள் குவிந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.