/

பிறந்த நாள் ஸ்பெஷல்: விஜய்க்கு கமல் ஹாசன் வாழ்த்து

நடிகர் கமல் ஹாசன், விஜய்க்குப் பிறந்த நாள் வாழ்த்துகளைக் கூறி ட்வீட் செய்ததாவது...

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:28 am

DIN

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் நடிகர் விஜய்க்கு கமல் ஹாசன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தனது 47-வது பிறந்த நாளைக் கொண்டாடும் விஜய்க்குச் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பிரபலங்களும் ரசிகர்களும் தங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் இரு போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. 

நடிகர் கமல் ஹாசன், விஜய்க்குப் பிறந்த நாள் வாழ்த்துகளைக் கூறி ட்வீட் செய்ததாவது:

தன் திறமையாலும் அன்பாலும் தமிழ் உள்ளங்களை வசீகரித்துள்ள என் அன்புத் தம்பி விஜய்க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.