நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

''இளையராஜாவை 3 நாட்களுக்கு முன்பு சந்தித்தேன்'' - கமல்ஹாசன் பகிர்ந்த தகவல்

இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

News image
Updated On :28 ஜனவரி 2024, 5:49 am

DIN

பொதுவாகவே புத்தாண்டு என்றாலே கமல்ஹாசன் - இளையராஜா கூட்டணியில் உருவான சகலகலா வல்லவன் படத்தில் இருந்து இளமை இதோ இதோ என்ற பாடல் தவறாமல் இருக்கும். இந்த நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், ஹேப்பி நியூ இயர் என்று தொடங்கி  இளமை இதோ இதோ பாடலை பாடுகிறார். பின்னர் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கிறார். இந்த விடியோவில் இளையராஜா மிகுந்த குதூகலமாக பாடுகிறார்.

இந்த நிலையில்  இளையராஜா பாடும் விடியோவை பகிரும் கமல்ஹாசன், ''இளையராஜாவை 3 நாட்களுக்கு முன்புதான் சந்தித்தேன். இளமை மாறாத ராஜாவாக குதூகலமாக பேசிக்கொண்டிருந்தார். அதையும் விட இளமை கூடியவராய் இன்று இணையத்தளத்தில் இளமை இதோ இதோ என்று பாடியதைப் பார்த்தேன். மனதளவில் என்றும் இளமை மாறாதிருக்கும் அண்ணனுக்கு புத்தாண்டு வாழ்த்துகள்'' என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.