இயக்குநர் ஹரி - அருண் விஜய் இணையும் படம்: பிரகாஷ் ராஜிற்கு பதிலாக வேறு நடிகர்
இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தில் பிரகாஷ் ராஜிற்கு பதிலாக சமுத்திரக்கனி நடிக்கிறார்.


இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தில் பிரகாஷ் ராஜுக்கு பதிலாக சமுத்திரக்கனி நடிக்கிறார்.
ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் வல்லவர் ஹரி. இயக்குநர் ஹரியின் படமும் சரி, அவர் படமாக்கும் விதமும் சரி மிக வேகமாக இருக்கும். தற்போது அருண் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் ஹரி.
இதையும் படிக்க | வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய போஸ்டர்: மகிழ்ச்சியில் ரசிகர்கள்
இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் பிரகாஷ் ராஜ் நடிப்பதாக இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் அவருக்கு கையில் அடிபட்டு, அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
இதனால் அவருக்குப் பதிலாக இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி நடிக்கிறார். படப்பிடிப்புத் தளத்தில் அருண் விஜய் மற்றும் இயக்குநர் ஹரியுடன் சமுத்திரக்கனி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, அருண் விஜய்யின் அண்ணனாக நடிக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...