தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

பிக் பாஸில் இன்னொரு வாய்ப்பு: நடிகை சொல்லும் காரணம்

நான் பங்கேற்றபோது எல்லோரிடமும் நல்லவிதமாக இருந்தது எனக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:59 am

IANS

ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-ம் பருவத்தில் இடம்பெற்றவர், ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்த சோனி சிங். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு மாதத்தில் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் பங்கேற்க விரும்புகிறார். அவர் சொல்லும் காரணம்:

பிக் பாஸ் 8-வது பருவத்தில் நான் பங்கேற்றேன். ஒரு மாதத்தில் வெளியேற்றப்பட்டேன். அப்போது நிகழ்ச்சிக்கு நான் சரியாகத் தயாராகவில்லை. எல்லோரிடமும் நல்லவிதமாக நடந்துகொண்டேன். என்னை வெளிப்படுத்திக்கொள்ளவோ ஒரு நிலைப்பாடு எடுக்கவோ முடியவில்லை. எல்லோரிடமும் நட்பை உருவாக்கிக் கொள்வதில் மும்முரமாக இருந்தேன். எல்லோருக்கும் நல்லவராக இருந்தேன். 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் பங்கேற்று ரசிகர்களைச் சந்தோஷப்படுத்த விரும்புகிறேன். நான் பங்கேற்றபோது எல்லோரிடமும் நல்லவிதமாக இருந்தது எனக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. இப்போது அனைவரையும் சந்தோஷப்படுத்தும் போட்டியாளராக இருக்க விரும்புகிறேன். என்னுடைய நடவடிக்கைகளால் என்னால் மக்களைச் சிரிக்க வைக்க முடியும். தொலைக்காட்சி தொடர்களால் என் மீது ஒரு முத்திரை குத்தப்பட்டுள்ளது. அதுவும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.