2008-ல் நான் ஒருவரைக் காதலித்தேன். பிறகு வேறுவழியில்லாமல் இருவரும் பிரிய நேர்ந்தது என நடிகை அனுஷ்கா பேட்டியளித்துள்ளார்.
பாகுபலி நட்சத்திரம் பிரபாஸைக் காதலிக்கிறார் என்று முதலில் செய்திகள் வெளியாகின. பிறகு கிரிக்கெட் வீரரைக் காதலிக்கிறார் எனவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின. சமீபத்தில் வெளியான செய்தி - தேசிய விருது பெற்ற இயக்குநரை நடிகை அனுஷ்கா காதல் திருமணம் செய்கிறார்! மும்பை ஊடகங்களில் வெளியான தகவலின்படி, இஞ்சி இடுப்பழகி படத்தை இயக்கிய பிரகாஷ் கோவலமுடியைத் திருமணம் செய்ய அனுஷ்கா திட்டமிட்டுள்ளார் எனச் செய்திகள் வெளியாகின. பிரகாஷ் கோவலமுடி 2004-ல் இயக்கிய பொம்மலடா படம், சிறந்த தெலுங்குப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. இவர், மூத்த தெலுங்கு இயக்குநர் ராகவேந்திர ராவின் மகன்.
இந்நிலையில் பிரபாஸுடனான காதல், தேசிய விருது பெற்ற இயக்குநருடன் திருமணம் என சமீபத்தில் வெளியான கிசுகிசுக்களுக்கு நடிகை அனுஷ்கா பதில் அளித்துள்ளார். ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
2008-ல் ஒருவரைக் காதலித்தேன். அருமையான உறவு அது. அது எனக்கு மிகவும் விசேஷமானது என்பதால் அவர் யார் என்பதைத் தெரிவிக்கமாட்டேன். நாங்கள் இருவரும் இப்போதும் காதலர்களாக இருந்திருந்தால் அவருடைய அடையாளத்தை வெளிப்படுத்தியிருப்பேன். வேறு வழியில்லாமல் பிரிந்தோம். என்னைப் பொறுத்தவரை இப்போதும் அது மரியாதைக்குரிய உறவு.
எனக்கு பிரபாஸைக் கடந்த 15 வருடங்களாகத் தெரியும். அதிகாலை 3 மணி நண்பர்களில் அவரும் ஒருவர். எங்கள் இருவரையும் இணைத்துப் பேசுவதற்குக் காரணம், இருவருமே திருமணமாகாதவர்கள், அருமையான ஜோடி போன்ற காரணங்களினால் தான். எங்கள் இருவருக்கும் இடையே ஏதாவது இருந்திருந்தால் இந்நேரம் வெளியே வந்திருக்கும். நாங்கள் காதலில் விழுந்திருந்தால் அதை மறைக்கத் தெரியாத அளவுக்கு இருவருமே உணர்வுகளை வெளிப்படுத்துபவர்கள்.
திருமணம் குறித்த செய்தியும் வதந்தியே. இதுபோன்ற வதந்திகளால் நான் பாதிக்கப்பட மாட்டேன். என் திருமணம் ஏன் எல்லோருக்கும் பெரிய விஷயமாக உள்ளது எனத் தெரியவில்லை. காதல் உறவை யாராலும் மறைக்க முடியாது. என் திருமணத்தை எப்படி மறைப்பேன்? இது மிகவும் ஜாக்கிரதையான விஷயம். ஜாக்கிரதையான உணர்வுடன் மக்கள் இதை அணுகவேண்டும் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

250 இசைக் கலைஞர்களுடன் பணியாற்றும் சாம் சிஎஸ்!

மும்பைக்கு எதிராக சதமடித்த முதல் சிஎஸ்கே வீரர்..! சஞ்சு சாம்சன் நிகழ்த்திய பல சாதனைகள்!
திருச்சூர் வெடிவிபத்து: சம்பவ இடத்தில் மேலும் உடல் பாகங்கள் கண்டெடுப்பு

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


