2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் செய்த தானம்

ஜனவரி 16-ம்  நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்த நாள்.  

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:25 pm

DIN

ஜனவரி 16-ம்  நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்த நாள். மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் விஜய் சேதுபதி, பெயருக்கு ஏற்ற வகையில் மக்களிடம் நற்பெயர் பெற்ற நடிகர். வெளிப்படையான பேச்சால் ரசிகர்கள் பலரை ஈர்த்துள்ளார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு உடல் உறுப்பு தானம் நிகழ்ச்சி அண்மையில் திருச்சியில் நடந்தது.  இந்நிகழ்ச்சியை முன்னெடுத்து நடத்தியவர்கள் அவரது ரசிகர் நற்பணி இயக்க நிர்வாகிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்வில் 202 ரசிகர்கள் தங்கள் குடும்பத்தாரிடம் முன் அனுமதி பெற்றபின், விஜய் சேதுபதியின் திருச்சி ரசிகர் நற்பணி இயக்க அலுவலகத்தில் குழுமினர். அங்கு உடல் உறுப்புதான படிமத்தை பூர்த்தி செய்து, அரசு மருத்துவமனைக்கு உடல் உறுப்புதான பிரிவு அதிகாரியிடம் சமர்ப்பித்தனர்.

ஒரே நாளில் 202 ரசிகர்கள் உடல் உறுப்பு தானம் செய்தது அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்தது. இதுபோன்ற செயல்களால் மேலும் பலர் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வருவார்கள். நல்லதொரு செயலுக்கு முன்மாதிரியாக விளங்கிய விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர் மக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.