1986-ல் வெளியான புன்னகை மன்னன் படத்தில் இடம்பெற்ற முத்தக்காட்சி, தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.
புன்னகை மன்னன் படத்தில் இடம்பெற்ற முத்தக்காட்சி என்னுடைய சம்மதம் பெறாமல் படமாக்கப்பட்டது. அந்தக் காட்சியில் கமல் முத்தம் கொடுப்பார் என எனக்குத் தெரியாது. அப்போது எனக்கு வயது 16 என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார் நடிகை ரேகா. அவருடைய இந்தப் பேட்டி சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
இந்தக் காட்சியை எனக்குத் தெரியாமல் படமாக்கியதற்காக இயக்குநர் கே. பாலசந்தரும் கமல் ஹாசனும் என்னிடம் எதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும்? சூப்பர் ஹிட்டான படம் அது. எனக்கு அதற்குப் பிறகு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஒருவேளை முத்தக்காட்சியை படமாக்குவார்கள் என்று எனக்கு முன்பே சொல்லப்பட்டிருந்தால் அக்காட்சியில் நடிக்க சம்மதித்திருக்க மாட்டேன் என்று ரேகா மேலும் கூறியுள்ளார்.
மீ டூ புகார்களும் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் அதிகமாக உள்ள இக்காலக்கட்டத்தில் புன்னகை மன்னன் முத்தக் காட்சி குறித்த ரேகாவின் பேட்டி சமூகவலைத்தளங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் ஒரு நடிகையிடம் முத்தக் காட்சி குறித்து தெரியப்படுத்தாமல் அதைப் படமாக்கியது தவறு. இக்காட்சியை ரேகாவுக்குத் தெரியாமல் படமாக்கியதற்காக ரேகாவிடம் கமல் மன்னிப்பு கோரவேண்டும் என்று சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே 4-ல் 62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை! எப்போது தொடங்கும்? - தேர்தல் ஆணையம்

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று ஹைதராபாத் விமான நிலையத்துக்கு!
மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி சாலைவலம்!
கொளுத்தும் வெய்யில்.. நல்ல விஷயம் சொன்ன சென்னை வானிலை!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


