2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

மாஸ்டர் படம் பற்றி அதிக ட்வீட்கள்: ஹாட்ரிக் அடித்த விஜய்

தமிழ்த் திரையுலகில் மட்டுமல்ல, ட்விட்டர் தளத்திலும் ராஜாவாக உள்ளார் விஜய்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 6:07 pm

DIN

தமிழ்த் திரையுலகில் மட்டுமல்ல, ட்விட்டர் தளத்திலும் ராஜாவாக உள்ளார் விஜய்.

இந்த வருடம் ட்விட்டர் தளத்தில் அதிகம் பேரால் ட்வீட் செய்யப்பட்ட திரைப்படம் என்கிற பெருமையை விஜய் நடித்த மாஸ்டர் படம் பெற்றுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம், நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பின்போது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை நடிகர் விஜய் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். வேன் மீதேறி படப்பிடிப்பில் இருந்த தன்னைப் பார்க்க வந்த ரசிகர்களுக்கு மத்தியில் அந்தப் புகைப்படத்தை எடுத்துக்கொண்டார் விஜய். 

2020-ல் ட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் அதிகம் பேரால் ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட் என்கிற சாதனையை இது படைத்தது. 

இந்நிலையில் இந்த வருடம் அதிகம் பேரால் ட்வீட் செய்யப்பட்ட படங்களில் விஜய் நடித்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ள மாஸ்டர் படம் முதலிடம் பிடித்து சாதனை செய்துள்ளது. இந்தப் பெருமையை அடையும் மூன்றாவது விஜய் படம் இது. கடந்த வருடம் பிகில் படமும் அதற்கு முன்பு சர்கார் படமும் பட்டியலில் முதலிடம் பிடித்தன. 2017-ம் மெர்சல் படம் மூன்றாம் இடம் பிடித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.