விஜய் மீண்டும் சாதனை: இந்திய அளவில் அதிகம் பேரால் ரீட்வீட் செய்யப்பட்ட நெய்வேலி செல்ஃபி
பாலிவுட் நடிகர்களின் ட்வீட்களை விடவும் விஜய்யின் ட்வீட் தான் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது.


இந்த வருடம் ட்விட்டரில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த ட்வீட்கள் குறித்து தகவல் வெளியிட்டுள்ளது ட்விட்டர் இந்தியா நிறுவனம்.
கடந்த வருடம் பொழுதுபோக்குப் பிரிவில் பிகில் பட போஸ்டரை விஜய் பகிர்ந்த ட்வீட், அதிக ரசிகர்களால் ரீட்வீட் செய்யப்பட்டது. பாலிவுட் நடிகர்களின் ட்வீட்களை விடவும் விஜய்யின் ட்வீட் தான் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது.
அதேபோல இந்த வருடம் சமூகவலைத்தளத்தின் ராஜாவாகத் தன்னை மீண்டும் நிரூபித்துள்ளார் விஜய்.
கடந்த பிப்ரவரி மாதம், நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பின்போது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை நடிகர் விஜய் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அந்தப் படப்பிடிப்பில் இருந்த விஜய்யிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் பிகில் படம் தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். பிறகு விஜய் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனையில் ஈடுபட்டனா். இந்தச் சமயத்தில் வெளியிடப்பட்ட செல்ஃபி புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேன் மீதேறி படப்பிடிப்பில் இருந்த தன்னைப் பார்க்க வந்த ரசிகர்களுக்கு மத்தியில் அந்தப் புகைப்படத்தை எடுத்துக்கொண்டார் விஜய்.
ட்விட்டரில் பகிரப்பட்ட இந்தப் புகைப்படத்தை இதுவரை 1,58,200 பேர் ரீட்வீட் செய்துள்ளர்கள். அதேபோல 3,78,200 பேர் லைக் செய்துள்ளார்கள். இதையடுத்து 2020-ல் ட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் அதிகம் பேரால் ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட் என்கிற சாதனையை இது படைத்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை ட்விட்டர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதையடுத்து இந்தச் சாதனையை விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகிறார்கள்.

அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதைப் பற்றி விராட் கோலி ட்வீட் செய்தது, இந்த வருடம் இந்திய அளவில் அதிகம் பேரால் லைக் செய்யப்பட்ட ட்வீட்டாக உள்ளது. இப்போது நாங்கள் மூவர். ஜனவரி 2021-ல் பிறக்கப் போகிறது என்று கடந்த ஆகஸ்ட் மாதம், ட்விட்டரில் தகவல் தெரிவித்தார் கோலி. இந்த ட்வீட்டை இதுவரை 6,43,400 பேர் லைக் செய்துள்ளார்.
2020-ல் அதிகம் பேர் பயன்படுத்திய ஹேஷ்டேக் ஆக #COVID19 உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் #SushantSinghRajput, #Hathras ஆகியவை உள்ளன. அமிதாப் பச்சன், கரோனாவால் பாதிக்கப்பட்டதைப் பற்றி எழுதிய ட்வீட், அதிகம் பேரால் மேற்கோள் காட்டப்பட்டு ட்வீட் செய்யப்பட்டுள்ளது.
பொழுதுபோக்குப் பிரிவில் அதிகம் பேர் பயன்படுத்திய ஹேஷ்டேக்குகளாக #DilBechara, #SooraraiPottru, #SarileruNeekevvaru ஆகியவை உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...