கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழா கொண்டாட்டக் குறும்படப் போட்டியின் பரிசளிப்பு விழா நடைபெற்றது. பாஜக மாநில செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியதாவது:
மத்திய அரசு ஹிந்தி மொழியைத் திணிக்கவில்லை. மற்றொரு மொழியைக் கற்றுக்கொள்வதில் தவறில்லை. ஆனால் இதனை அரசியல் ஆக்குகிறார்கள். ஒரு மொழி இருப்பதால் இன்னொரு மொழி அழியும் என தவறான பிரசாரம் இங்குப் பரப்பப்பட்டு வருகிறது. பொது மொழி என ஒன்று இருப்பது அவசியம். 90% மக்களுக்கு மத்திய அரசின் திட்டம் தெரியவில்லை. அதற்கு மொழியும் ஒரு காரணம். மோடியின் பேச்சை நான் மொழிமாற்றம் செய்ய ஆசைப்படுகிறேன். அதற்கான உரிமம் வாங்கலாம் என உள்ளேன் என்று பேசினார்.
பிறகு செய்தியாளர்களிடம் ஞானவேல் ராஜா பேசியதாவது: ஹிந்தி என்பது இன்னொரு மொழி. ஹிந்தி திணிப்பு அல்ல, ஹிந்தி படிப்பு. பொதுவாக ஒரு மொழி இருப்பது தவறில்லை என்று பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வெங்காயம் சூட்டைத் தணிக்குமா? சொல்கிறார் பாஜக அமைச்சர்

மே 15-ல் வெளியாகிறது இயக்குநர் சற்குணத்தின் புதிய இணையத் தொடர்!

பொல்லாத ஆசைகள்... 29 படத்தின் புதிய பாடல் வெளியானது!

ஐபோன் 17 வாங்க சிறந்த இணைய விற்பனை தளம் எது? எவ்வளவு தள்ளுபடி?
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


