பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் வேணு மாதவ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 39.
செகந்திராபாத் யசோதா மருத்துவமனையில் கடந்த இரு வாரங்களாக சிகிச்சை எடுத்து வந்தார் வேணு மாதவ். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யச் சொல்லி மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலையில் கடந்த ஞாயிறன்று வீட்டுக்குத் திரும்பினார் வேணு மாதவ். எனினும் நேற்று அவருடைய உடல்நிலை மோசமானதையடுத்து, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில், இன்று மதியம், வேணு மாதவ் சிகிச்சை பலனின்றி காலமானார்.
நல்கொண்டா மாவட்டத்தில் பிறந்த வேணு மாதவ், மிமிக்ரி கலைஞராகக் கவனம் பெற்றதால், பட வாய்ப்பைப் பெற்றார். 1996-ல் சமப்ரதயம் என்கிற தெலுங்குப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். 150-க்கும் அதிகமான தெலுங்கு மற்றும் தமிழ்ப் படங்களில் நடித்த வேணு, கடைசியாக 2016-ல் டாக்டர் பிரமாநந்தையா ஸ்டூடன்ஸ் என்கிற படத்தில் நடித்தார்.
வேணு மாதவின் மறைவுக்குத் திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே 2-ல் தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!
நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம் கையெழுத்து! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!

மஹிந்திரா ஹாலிடேஸ்: 4வது காலாண்டு லாபம் 43% சரிவு!

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய வங்கதேசம்!
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


