2005-ல் அன்பே ஆருயிரே என்கிற தமிழ்ப் படத்தின் மூலமாகத் திரையுலகுக்கு அறிமுகமானார், நிலா. மீரா சோப்ரா என்கிற பெயரைத் தமிழுக்காக நிலா என மாற்றினார் எஸ்.ஜே. சூர்யா. பிரபல பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, பரினீதி சோப்ரா ஆகியோரின் உறவினர் இவர். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் தமிழ், தெலுங்குப் படங்களில் மட்டும் நடித்து வந்த நிலா, 2014 முதல் மும்பையில் வசித்து, தீவிரமாக ஹிந்திப் படங்களில் நடிக்க முயன்று வருகிறார். எனினும் கடந்த 5 வருடங்களில் நான்கு ஹிந்திப் படங்களில் மட்டுமே அவர் நடித்துள்ளார்.
அக்ஷய் கண்ணா, ரிச்சா சத்தா நடித்த செக்சன் 375 என்கிற ஹிந்திப் படம் சமீபத்தில் வெளியானது. அந்தப் படத்தில் நிலா நடித்து நல்ல பெயரைப் பெற்றுள்ளார். ஹிந்திப் படங்களில் மீரா சோப்ரா என்கிற பெயரிலேயே நிலா நடிக்கிறார்.
பாலிவுட் வாய்ப்புகள் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டிகளில் நிலா கூறியதாவது: நான்கு வருடங்களாக மும்பையில் வசித்தும் எனக்கென்று நண்பர்கள் யாரும் இங்கு இல்லை. பாலிவுட்டில் ஒரே மாதிரியான வேடங்களே எனக்குக் கிடைக்கின்றன. இது வருத்தமானது. இதை உடைக்கவேண்டும் என நினைக்கிறேன். ஆனால் முடியவில்லை. நான் நினைக்கும் கதாபாத்திரங்கள் எனக்குக் கிடைப்பதில்லை. தில்லிக்கு வந்துவிடு என என் பெற்றோர்கள் சொன்னாலும் நல்ல வாய்ப்புகளுக்காக மும்பையில் தான் உள்ளேன். இந்த நிலையில் செக்சன் 375 என்கிற அற்புதமான பட வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தமிழ், தெலுங்குப் படங்களை விடவும் ஹிந்திப் படங்களில் நடிக்கவே விரும்புகிறேன். நான் வட இந்தியாவைச் சேர்ந்தவள். என் ரத்தத்தில் பஞ்சாபி உணர்வு கலந்துள்ளது. ஹிந்திப் படங்களில் நடிக்கும்போது அதிக நம்பிக்கையுடன் உள்ளேன் என்று கூறியுள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரமாக வேண்டும், தன் சகோதரி பிரியங்கா சோப்ரா போல புகழடையவேண்டும் என்கிற கனவுகளுடன் இருப்பதால் இன்னும் சிறிது காலத்துக்கு கோலிவுட் பக்கம் நிலா வருவது சந்தேகமே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே 2-ல் தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!
நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம் கையெழுத்து! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!

மஹிந்திரா ஹாலிடேஸ்: 4வது காலாண்டு லாபம் 43% சரிவு!

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய வங்கதேசம்!
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


