மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

கணவர் நாக சைதன்யாவின் முதல் மனைவி குறித்து மனம் திறந்து பேசிய நடிகை சமந்தா!

திருமணத்துக்கு முன்பு நீ, லிவ் இன் உறவில் இருந்தது எனக்குத் தெரியும்...

News image
Updated On :24 செப்டம்பர் 2019, 7:37 am

தெலுங்கு நடிகை லக்‌ஷ்மி மஞ்சுவின் ஃபீட் அப் வித் ஸ்டார்ஸ் என்கிற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் நடிகை சமந்தா. அந்நிகழ்ச்சியில், பல தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்துகொண்டார் சமந்தா.

அப்போது, திருமணத்துக்கு முன்பு சமந்தாவும் நாக சைதன்யாவும் லிவ் இன் உறவில் இருந்தது குறித்துக் கூறினார் லக்‌ஷ்மி. அவர் கூறியதாவது: நீ இப்போது என்னை எல்லாவற்றையும் சொல்ல வைக்கிறாய். திருமணத்துக்கு முன்பு நீ, லிவ் இன் உறவில் இருந்தது எனக்குத் தெரியும். திருமணத்துக்குப் பிறகு உன் படுக்கையறையில் வித்தியாசமாக இருந்த மூன்று விஷயங்களைச் சொல் என்றார் லக்‌ஷ்மி, சமந்தாவிடம்.

தலையணை தான் சைதன்யாவின் முதல் மனைவி. நான் முத்தமிட வேண்டும் என்றாலும் தலையணை தான் எங்கள் இருவரின் நடுவிலும் இருக்கும் என்றவர் பிறகு, போதும். நான் நிறைய சொல்லிவிட்டேன் என்றார் சமந்தா. 

பிரபல நடிகர் நாகார்ஜூனாவின் மகனும் தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவை 2017 அக்டோபரில் திருமணம் செய்துகொண்டார் சமந்தா. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வடிவத்தில் சமந்தாவும் நாக சைதன்யாவும் ஜோடியாக நடித்தார்கள். அதிலிருந்து இருவரும் நண்பர்களாகி பிறகு காதலர்களாகவும் மாறினார்கள். இருவருக்கும் கோவாவில் திருமணம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.