மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

பாலா படத்தில் மீண்டும் நடிக்கும் சூர்யா!

நந்தா, பிதாமகன் என இரு படங்களில் இணைந்த சூர்யா - பாலா கூட்டணி மீண்டும் இணையவுள்ளது... 

News image
Updated On :23 செப்டம்பர் 2019, 7:17 am

நந்தா, பிதாமகன் என இரு படங்களில் இணைந்த சூர்யா - பாலா கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. 

சுதா கொங்குரா இயக்கத்தில் சூரரைப் போற்று என்கிற படத்தில் தற்போது நடித்து வருகிறார் சூர்யா. மேலும், விஸ்வாசம் பட இயக்குநர் சிவாவின் அடுத்தப் படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கவுள்ளார். ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியானது. 

இந்நிலையில் பாலாவின் படத்தில் சூர்யா மீண்டும் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாச்சியார் படத்துக்கு அடுத்ததாக அர்ஜூன் ரெட்டி என்கிற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கை பாலா இயக்கினார். ஆனால், வர்மா என்று பெயரிடப்பட்ட அந்தப் படத்தைக் கைவிடுவதாகத் தயாரிப்பாளர்கள் அறிவித்தார்கள். இதன்பிறகு வேறொரு இயக்குநரைக் கொண்டு அர்ஜூன் ரெட்டி தமிழ் ரீமேக் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சூர்யா நடிக்கும் படத்தை பாலா இயக்கத் தயாராகிவிட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இருவரும் இணையும்  படம் ஜனவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.