நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நீண்ட காலம் தமிழ் சினிமாவில் தாக்கு பிடிக்கும் நடிகை

ஒரு திறமையான நடிகைக்கு தன் கண்களும் அவை வெளிப்படுத்தும் உணர்வுகளும் மிக முக்கியம்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:23 am

DIN

ஒரு திறமையான நடிகைக்கு தன் கண்களும் அவை வெளிப்படுத்தும் உணர்வுகளும் மிக முக்கியம். அது நடிகை சாந்தினிக்கு மிக இயல்பாக அமைந்துள்ளது. அவரின் நடிப்புப் பயணத்தில் கண்களாலும் நடிப்பாலும் மிரட்டிய படங்கள் உண்டு.

நீண்ட காலம் தமிழ் சினிமாவில் தாக்கு பிடிக்கும் நடிகைகள் வெகு சிலரே. அந்த வகையில் தன் திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகை சாந்தினிக்கு தனி இடம் உண்டு.

Story image

சித்து +2 வில் திரைக்கதை மன்னன் பாக்யராஜ் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு சமீபத்தில் வெளியான ராஜா ரங்குஸ்கி வரை இவரின் கலைப் பயணம் தொய்வின்றி தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ராஜா ரங்குஸ்கி படத்தில் இவர் ஏற்று நடித்த வில்லி கதாபாத்திரம் பலரின் புருவங்களை உயர்த்தியது. இவருக்கு நடிப்பில் பெரிய நல்ல பெயரையும் பெற்று கொடுத்தது.

Story image

இவரது நடிப்பை கண்டு வியந்த பாலாஜி சக்திவேல், இவரை அணுகி  ஒரு கதை சொல்ல, அந்த கதை சாந்தினிக்கு மிகவும் பிடித்த விட, உடனே நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். அந்த படம்  தற்போது முடியும் தருவாயில் உள்ளது. மேலும் மென்மையான உணர்வுகளை அழகான திரைப்படமாக்கும் ராதாமோகன் சாந்தினியின் நடிப்புத் திறனை கவனித்து தனது புதிய படத்தில் நடிக்க அழைத்துள்ளார். 

எஸ்.ஜே சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் சாந்தினி கதாநாயகியாக நடிக்கிறார். சாந்தினியின் படங்கள் வரிசையில் இந்தப் படம் மிக முக்கியமான படமாக இருக்கும் என்கிறார்கள். ஒருபுறம் பாலாஜி சக்திவேல் படம், மறுபுறம் ராதாமோகன் படம் என சாந்தினியின் வரிசையான படங்கள் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

Story image

ஒரு நாயகியாக சினிமாவில் நீண்ட காலம் சாந்தினி நிலைத்து வருவதற்கு அவரது திறமை மட்டுமே பிரதான காரணம். மேற்கூரிய படங்கள் தனது சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படங்களாக இருக்கும் என்கிறார் சாந்தினி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.