இந்திய அளவில் பிரபலமாக உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்யவேண்டும் என்று அகில இந்திய வணிகர்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) கோரிக்கை விடுத்துள்ளது.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு இந்திய வணிகர்களின் கூட்டமைப்பு இது தொடர்பாக எழுதிய கடிதத்தில் கூறியதாவது:
கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆபாசமாகக் காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சியைக் குடும்பத்துடன் இணைந்து பார்க்கச் சிரமமாக உள்ளது. இதை உங்கள் கவனதுக்குக் கொண்டு வருகிறோம். டிஆர்பி-க்காக நம் நாட்டின் பாரம்பரிய, கலாசார விழுமியங்களைச் சிதைப்பதாக உள்ளது. பன்முகத்தன்மையுடன் உள்ள இந்தியா போன்ற ஒரு நாட்டில் இதுபோன்ற நிகழ்ச்சியை நாம் அனுமதிக்கக் கூடாது.
இந்நிகழ்ச்சி அனைவரும் பார்க்கும் முக்கியமான நேரத்தில் ஒளிபரப்பாவதை நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் மறந்துவிடுகிறார்கள். எல்லா வயதினரும் இந்நிகழ்ச்சியைப் பார்க்கிறார்கள். தற்போதைய பிக் பாஸ் நிகழ்ச்சி எல்லாவிதமான நெறிமுறைகளையும் தாண்டியுள்ளது. எனவே இந்த நிகழ்ச்சியை உடனடியாகத் தடை செய்யவேண்டும் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
அகில இந்திய வணிகர்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பிரவீன் கண்டேல்வால் இதுபற்றிக் கூறியதாவது: பிக் பாஸின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் தணிக்கை வாரியத்தால் கண்காணிக்கப்பட வேண்டும். நிகழ்ச்சியில் நடப்பதெல்லாம் மிகத் தவறு. எங்களுடைய கோரிக்கையை ஜாவடேகரிடம் வலியுறுத்துவோம் என்று கூறியுள்ளார்.
ஹிந்தி பிக் பாஸ் 13 தொலைக்காட்சி நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கியுள்ளது. இந்த வருட நிகழ்ச்சியையும் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தான் தொகுத்து வழங்குகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கத்தரி வெய்யில்: என்ன செய்யலாம், எதைத் தவிர்க்கலாம்!
நம்பிக்கை இருந்தால் அதிசயம் நடக்கும்: சூர்யா

சூடம்மாள் அம்மன் சிலை மீது சூரிய ஒளி படும் அபூர்வ காட்சி

ஹீட் ஸ்ட்ரோக் - அறிகுறிகள் என்ன? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


