மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

இந்திய அளவில் அதிகம் விற்பனையான இ புத்தகங்களின் பட்டியலில் முதலிடம்: பூமணியின் ‘வெக்கை'க்குக் கிடைத்த புதிய வரவேற்பு!

அமேஸான் தளத்தில் அதிகம் விற்பனையான கிண்டில் இ புத்தகங்களின் பட்டியலில் பூமணியின் வெக்கை நாவல் முதல் இடத்தைப் பிடித்துள்ளது...

News image
Updated On :5 அக்டோபர் 2019, 9:09 am

வடசென்னை படத்துக்கு அடுத்ததாக அசுரன் என்கிற படத்தில் தனுஷ் - வெற்றி மாறன் இணைந்துள்ளார்கள். இப்படத்தை தாணு தயாரித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். 

எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலைத் தழுவி இந்தப் படத்தை எடுத்துள்ளார் வெற்றி மாறன். சாகித்ய அகாடமி விருது பெற்ற பூமணி, 1982-ல் இந்த நாவலை எழுதியுள்ளார். 

இந்நிலையில் அசுரன் படம் நேற்று வெளியானது. கடந்த சில வாரங்களாக அசுரன் படத்தை முன்வைத்து வெக்கை நாவல் குறித்த விவாதங்கள் சமூகவலைத்தளங்களில் அதிகமாக இருந்தன. இதனால் அந்த நாவலைப் படிக்கும் ஆர்வம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, அமேஸான் தளத்தில், இந்திய அளவில் அதிகம் விற்பனையான கிண்டில் இ புத்தகங்களின் பட்டியலில் பூமணியின் வெக்கை நாவல் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதன் இ புத்தகத்தின் தற்போதைய விலை - ரூ. 39. அமிஷ் திரிபாதி, ராபின் சர்மா, சேதன் பகத் போன்ற பிரபல எழுத்தாளர்களின் நூல்கள் அனைத்தும் பூமணியின் வெக்கை நாவலை விடவும் குறைவான எண்ணிக்கையில் வாசகர்களால் வாங்கப்பட்டுள்ளன. இதனால் அசுரன் படத்தால் வெக்கை நாவலுக்கு ஏராளமான புதிய வாசகர்களும் அதிகக் கவனமும் தற்போது கிடைத்துள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.