முதலில் திரைக்கதை, வசனம் போன்றவற்றில் மட்டும் தான் ஈடுபடலாம் என எண்ணினேன். ஆனால் இப்படத்தைத் தயாரிக்கும் என் மனைவி லலிதா தான் இந்தக் கதையை நீங்களே இயக்கிவிடுங்கள் என்று ஊக்கம் அளித்தார். அதனால் இயக்குநராக முடிவு செய்துவிட்டேன் எனக் கூறியுள்ளார் பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்.
தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நான்கு புத்தகங்களின் ஆசிரியர், போஃப்டா திரைக்கல்வி நிறுவனத்தின் நிறுவனர், இரு தேசிய விருதுகளைப் பெற்றவர் எனப் பல பெருமைகளைக் கொண்டவர் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன். இந்நிலையில் த்ரில்லர் படம் ஒன்றைத் தான் இயக்கவுள்ளதாக் அறிவித்துள்ளார். கதை - திரைக்கதை - வசனம் என முழுப்பொறுப்புகளையும் தானே ஏற்றுக்கொண்டு தனது முதல் படத்தை இயக்குகிறார் தனஞ்ஜெயன்.
இயக்குநர் ஸ்டான்லி, கருந்தேள் ராஜேஷ் மற்றும் இளைஞர்கள் குழுவுடன் திரைக்கதையை விவாதித்து முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏலகிரியில் கூடுதலாக அரசு தங்கும் விடுதி: சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை!

காஞ்சனகிரி மலை சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்படுமா? பொதுமக்கள் எதிா்பாா்ப்பு!!
டாஸ்மாக் மதுபாட்டில்கள் கடத்தியவா் கைது

நாம் தமிழா் கட்சிக் கொடி அவமதிப்பு: கடலூா் எஸ்.பி.யிடம் புகாா்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


