நேசமணியாக மாறிய பிகில் டீம்! வைரல் விடியோ
விஜய் - அட்லி கூட்டணியில் தீபாவளி சமயத்தில் வெளியான படம் பிகில்.


விஜய் - அட்லி கூட்டணியில் தீபாவளி சமயத்தில் வெளியான படம் பிகில். சர்ச்சைக்கு நடுவே வெளியாகி வெற்றிவாகை சூடி வரும் இந்தப் படத்தில் நயன்தாரா, இந்துஜா, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசை ஏ.ஆர்.ரஹ்மான். பிகில் படத்தில் சிங்கப் பெண்களாக நடித்து கால்பந்து போட்டியில் கலக்கிய இந்துஜா உட்பட இதர நடிகைகள் அனைவருக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

பிகில் பட ஷுட்டிங் ஸ்பாட்டில் இயக்குநர் அட்லி மற்றும் சிங்கப் பெண்கள் ஆகியோர் இணைந்து உலக அளவில் ட்ரெண்டான ப்ரெண்ட்ஸ் பட கான்ட்ராக்டர் நேசமணி காட்சியை டிக்-டாக் விடியோவாக எடுத்துள்ளனர். அது தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது.

இதையடுத்து பிகில் பட ஷுட்டிங்கின் போது நடந்த சில வேடிக்கையான நிகழ்வுகளின் காணொளி தற்போது வெளியாகி உள்ளது. அதில் ஒன்றில், உலக அளவில் வைரலான நேசமணி கதாபாத்திரத்தின் காட்சிகளை டிக்-டாக் விடியோவாக அட்லி மற்றும் ஃபுட் பால் டீம் பெண்கள் நடித்துள்ளனர். நேசமணியாக அட்லியும், மற்ற நடிகைகள் பிற கதாபாத்திரங்களில் இந்த விடியோவில் நடித்துள்ளனர். மீண்டும் #Nesamani #Prayfornesamani போன்ற ஹேஷ்டாக்-குகளில் இந்த விடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...