ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மத்திய அரசின் சிறப்பு விருது: நன்றி தெரிவித்த ரஜினி!

கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் தன்னைக் கெளரவப்படுத்துவதற்காக இந்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.  

News image
Updated On :2 நவம்பர் 2019, 7:16 am

கோவா திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்குச் சிறப்பு விருது வழங்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் மற்றும் எண்டா்டெயின்மென்ட் சொசைட்டி ஆஃப் கோவா அமைப்பு இணைந்து, ஆண்டுதோறும் கோவா திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. சா்வதேச தரத்திலான இந்தத் திரைப்பட விழாவில், உலகம் முழுவதிலும் இருந்து திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொள்வது வழக்கம். வரும் நவம்பா் 20-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை கோவாவில் நடக்கவுள்ள இந்த விழாவிற்கு, இது 50-ஆவது ஆண்டு என்கிற சிறப்பு அம்சமும் உள்ளது. வழக்கமாக 10 நாள்கள் நடைபெறும் கோவா திரைப்பட விழாவில் சுமாா் 200 படங்கள் திரையிடப்படும். இது 50-ஆவது ஆண்டு விழா என்பதால், சுமாா் 300 படங்கள் திரையிடப்படுகின்றன.

மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம், தகவல் ஒலிபரப்புத் துறைகளின் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் இன்று தெரிவித்ததாவது: 

கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிக்கு ICON OF GOLDEN JUBILEE OF #IFFI2019 என்கிற சிறப்பு விருது வழங்கப்படுகிறது. விருது குறித்து ரஜினிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். 

இந்நிலையில் இந்த விருதை வழங்கும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் வெளியிட்டுள்ளார் ரஜினி. கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் தன்னைக் கெளரவப்படுத்துவதற்காக இந்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.