தமிழகத்தைச் சேர்ந்த 29 வயது அபினவ் முகுந்த், இந்திய அணிக்காக 7 டெஸ்டுகளில் விளையாடி 2 அரை சதங்களை எடுத்துள்ளார். கடைசியாக 2017-ல் இலங்கைக்கு எதிராக விளையாடி 2-வது இன்னிங்ஸில் 81 ரன்கள் எடுத்தார். எனினும் அதற்குப் பிறகு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு முகுந்துக்குக் கிடைக்கவில்லை.
இந்த வருட விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டியில் தமிழக அணி இறுதிச்சுற்றில் கர்நாடக அணியிடம் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் 12 ஆட்டங்களில் விளையாடி 600 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 2-ம் இடம் பிடித்தார் முகுந்த். கடந்த வருட விஜய் ஹசாரே போட்டியில் 9 ஆட்டங்களில் விளையாடி 560 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றார் முகுந்த்.
எனினும் இந்திய அணிக்கான தேர்வுக்குழு முகுந்தைச் சீந்தவில்லை. தற்போது நடைபெற்று வரும் தியோதர் கோப்பைக்கான மூன்று அணிகளிலும் முகுந்துக்கு இடம் கிடைக்கவில்லை.
முகுந்தின் இந்த நிலைமை கண்டு வருந்தாத தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களே இருக்கமுடியாது. நடிகர் ஆர்ஜே பாலாஜியும் தன்னுடைய வருத்தத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது:
ஐபிஎல்-லில் ஒவ்வொருமுறையும் யாராவது 50, 100 ரன்கள் அடித்தால் அந்த வீரர் இந்தியாவுக்காக விளையாடவேண்டும் என விரும்புவோம். விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் மூன்று முறை தலா 500 ரன்கள் எடுத்த ஒரே வீரர் - அபினவ் முகுந்த் மட்டுமே. இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்த 2-வது வீரர். இந்திய அணிக்குத் தேர்வாவதை விடுங்கள், தியோதர் கோப்பைப் போட்டிக்குக்கூட அவர் தேர்வாகவில்லை.
மேலும், இந்திய அணிக்காகக் கடைசியாக விளையாடிய இன்னிங்ஸில் அவர் இலங்கைக்கு எதிராக 81 ரன்கள் எடுத்தார். பிறகு இந்திய அணிக்கு அவர் தேர்வாகவே இல்லை. ஆமாம், 81 ரன்கள் எடுத்த பிறகு அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு 29 வயதுதான். தொடர்ந்து விளையாடி போராடுங்கள் முகுந்த் என்று ஆர்ஜே பாலாஜி எழுதியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

27.4.1976: தமிழ் நாட்டில் 98.3% கிராமங்கள் மின் வசதி பெற்றன
ஈரானுடன் அமைதி பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டா்கள்! - அதிபர் டிரம்ப் அறிவிப்பு

சேலத்தில் ‘ரிக்’ தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

தில்லியில் வெப்ப அலைக்கான செயல்திட்டம்: முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டார்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


