இதயம் என் இதயத்தைத் தொட்டது: இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து பாரதிராஜா! (படங்கள்)
நீண்ட நாளைக்குப் பிறகு தேனியில் இளையராஜாவைச் சந்தித்ததாக இயக்குநர் பாரதிராஜா சமூகவலைத்தளத்தில் பதிவு எழுதியுள்ளார்.


பாரதிராஜா - இளையராஜா கூட்டணியை தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாது. 1977-ல் 16 வயதினிலே படத்தில் ஆரம்பித்த இருவர் கூட்டணியும் 1992-ல் நாடோடி தென்றல் படம் வரை நீடித்தது. இதன்பிறகு இந்தக் கூட்டணி பிரிந்தது.
இந்நிலையில் நீண்ட நாளைக்குப் பிறகு தேனியில் இளையராஜாவைச் சந்தித்ததாக இயக்குநர் பாரதிராஜா சமூகவலைத்தளத்தில் பதிவு எழுதியுள்ளார். இயலும் இசையும் இணைந்தது... இதயம் என் இதயத்தை தொட்டது... என் தேனியில் என்று எழுதியுள்ளார் பாரதிராஜா. மேலும் இளையராஜாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.


தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...