நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

எதுக்காக உடை அணியணும்னு மறந்துடாதீங்க! பிரபல நடிகைகளை திட்டிய ரசிகர்கள்!

பிரான்சில் உலகப் புகழ்ப் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா நடந்து கொண்டிருக்கிறது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:55 am

ராக்கி

பிரான்சில் உலகப் புகழ்ப் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா நடந்து கொண்டிருக்கிறது. இத்திரைப்பட விழாவில் பங்கேற்கும் நடிகைகள் தங்கள் மேக்கப் மற்றும் உடைகளுக்கு அதீத முக்கியத்துவம் தருவார்கள்.

Story image

இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் பாலிவுட் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், சோனம் கபூர், கங்கனா ரனாவத், ப்ரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Story image

கங்கனா, ப்ரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோன் அணிந்திருந்த உடையை பார்த்து இந்திய ரசிகர்கள் அதிர்ந்து விட்டனர்.

Story image

இவர்கள் அணிந்திருந்த உடைகள் அந்த நாட்டில் பெரும்பாலானோர் விரும்பி அணியும் உடைதான். ஆனாலும் இந்திய ரசிகர்களால் இந்த தாராளமயமான உடைகளைப் பார்த்து சற்று அதிர்ந்துதான் போனார்கள்.

Story image

ஒருவர் எதற்காக உடை அணிகிறார்கள் என்பதை மனத்தில் வைத்துத்தான் உடைகளை அணிய வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Story image

ஆனால் பல ரசிகர்கள் இந்த உடைகளை பாராட்டி இது போன்று அவர்கள் இந்திய திரைப்பட விழாவுக்கும் உடையணிய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

Story image

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கங்கனா ரனாவத், ப்ரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் ஆகியோர் ரெட் கார்பெட்டில் கம்பீரமாகவும் ஒயிலாகவும் நடந்து வந்தனர்.

Story image
Story image

பிரியங்கா சோப்ரா கருப்பு நிற ஆடை அணிந்து அனேக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அண்மையில் மெட் காலா எனும் நிகழ்வில் பங்கேற்று பரவலான பாராட்டுகளையும் விமரிசனங்களையும் பெற்றிருந்த ப்ரியங்காவின் மற்றொரு உடை ரசிகர்களின் புருவத்தை உயர்த்தும்விதமாக அமைந்திருந்தது.

Story image

இந்த உடைகள் பிரத்யேகமாக அவர்களுக்காக வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

Story image

கேன்ஸ் திரைப்பட விழாவில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், இயக்குநர்கள் விக்னேஷ் சிவன், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பிரபல கோலிவுட் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.