நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வைரலாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஃபோட்டோ இதுதான்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் 'தர்பார்'. இந்தப் படத்தில் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது அனைவரும் அறிந்த விஷயம்தான்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:54 am

ராக்கி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் 'தர்பார்'. இந்தப் படத்தில் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது அனைவரும் அறிந்த விஷயம்தான்.

Story image

அண்மையில் ரஜினியுடன் முருகதாஸ் குடும்பத்தார் சில புகைப்படங்களை எடுத்திருந்தனர்.   இந்த புகைப்படங்கள் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. 

Story image

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் மனைவியும் அவரது மகளும் ரஜினியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட இந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. தர்பார் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

Story image

படத்தின் வில்லனாக பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் நடிக்கிறார். இது அவரது முதல் தமிழ்ப் படம் ஆகும். பிரதீக், நடிகர்கள் ராஜ் பப்பர், ஸ்மிதா படீலின் மகன் ஆவார். தர்பார் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். இது ரஜினி நடிக்கும் 167-வது படம்.

Story image

லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படம் அடுத்த வருடப் பொங்கல் தினத்தன்று படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் ஜோடி - நயன்தாரா. இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடிக்கவுள்ளார் ரஜினி என்பதை சில புகைப்படங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

Story image

ஏப்ரல் 10-ம் தேதி மும்பையில் தொடங்கிய 'தர்பார்' படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடைபெற்று வருகிறது. படத்தைப் பற்றிய செய்திகள், புகைப்படங்கள் என வழக்கம் போல் இணையத்தில் வெளி வரும் சமயங்களில், ரஜினி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.