94 ல் உலக அழகியாக முடிசூடிக் கொண்டவர் ஐஸ்வர்யா ராய். அழகியென்றாலும் கூட அதுவரை உலகில் வேறு எந்தப் பெண்ணுக்கும் கிடைக்காத அளவுக்கு உலகம் முழுவதுமே ஒருவிதமான கொண்டாட்டமான வரவேற்பும், அங்கீகாரமும் ஐஸ்வர்யா ராய்க்கு கிடைத்தது. இன்றும் கூட பெண்களின் அழகு குறித்து கேலி செய்ய வேண்டுமென்றால், ஆமா ’ அவ பெரிய ஐஸ்வர்யா ராய் பாரு’ என்று சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறது இந்த சமூகம். அந்த அளவுக்கு இந்தியாவின் குக்கிராமங்களிலும் கூட தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார் ‘ஐஸ்’. அப்படிப் பட்ட ஐஸ்வர்யாவைப் பிரதி எடுத்தது போல இன்னொரு பெண் இருந்தால் எப்படி இருக்கும்? ‘உலகினில் உன் போல ஒருவரும் இல்லை’ இனிமேல் பிறந்தால் அது நம் பிள்ளை’ என்று அந்நியன் திரைப்படத்தில் பாடல் வரியொன்று வரும். அதுபோல ஐஸ்வர்யாவைப் பிரதி எடுத்துக் கொண்டு பிறக்க வேண்டுமென்றால் அது அவரது மகளாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. இதோ ஈரானியன் மாடல் ஒருவர் அப்படியே அச்சு அசலாக ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கிறார்.