இதுவரை என்கூட 84 பெண்கள் கதாநாயகியாக நடிச்சிருக்காங்க, அதுல லட்சுமி எங்கூட 18 படங்களில் ஜோடியா நடிச்சிருக்காங்க. லஷ்மி, சிவகுமார் ஜோடி ஏன் ஸ்பெஷல்ன்னா? என் முதல் கதாநாயகி வயசானவங்கன்னு சொல்லி படத்துல இருந்தே தூக்கிட்டாங்க, இரண்டாவது கதாநாயகி காஞ்சனா, அவங்க ஏர்கோஸ்டஸா இருந்தவங்கன்னு முதல்ல பயந்துட்டே நடிச்சேன். அப்புறம் ஒரு நாள் விளையாட்டா , ஐ லவ் சொல்லிப் பார்ப்போமேன்னு சொன்னதுக்கு அந்தம்மா, போட சின்னப்பையான்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க, சரிம்மா தேங்க்ஸ்னு வந்துட்டேன். அப்போ தான் தெரிஞ்சது அந்தம்மா என்னை விட வயசானவங்கன்னு. அடுத்து வந்தவங்க நான் சினிமாவுக்குள்ள நுழையுறதுக்கு முன்னாடியே 14 வருஷமா கதாநாயகியா நடிச்சிட்டு இருந்தவங்க. அவங்க கூட ஹீரோவா நடிச்ச என் நிலைமையை நினைச்சுப்பாருங்க. அப்புறம் எனக்கு ஜோடியா கிடைச்சவங்க தான் லட்சுமி. குமுதத்தில் எழுதி இருந்தாங்க... எங்க ஃபோட்டோவைப் போட்டு, கிழங்கட்டைகளைப் பார்த்துப் பார்த்து அலுத்துப் போன கண்களுக்கு உண்மையிலேயே இளமையோடு இருக்கும் இந்த இரண்டு இளம் உள்ளங்களின் அளவான நடிப்பைப் பார்க்கும் போது இவர்கள் நன்றாக இருக்க வேண்டுமென்று வாழ்த்தத் தோன்றுகிறது’ என்று எழுதி இருந்தார்கள். உண்மையில் எனக்கு பொருத்தமான ஜோடியாக செட் ஆன முதல் நடிகை லட்சுமி. அது தான் ஸ்பெஷல்.